Skip to main content

Posts

Showing posts from July, 2013

உதிர்ந்த கிடக்கின்றஇலை-

ரவிஉதயன் உதிர்ந்த கிடக்கின்ற இலையொன்றை எடுத்து முகர்ந்தவாறே இது என்ன மரமென்று? கல்யாணியண்ணன் கேட்டார். நிழலின் குளிர்ச்சியில் நின்றுகொண்டிருந்த எனக்கும் இலைமடங்கலின் வாசனைஅடிக்கிறது. நெடுநெடுவென்று வளர்ந்துவிட்டது அவரைப் போலவே அவரது கேள்வி என் அறியாமையின்மீது! பெயர் தெரியாமரமென்கிறேன் அவரிடம் அவரும் புன்னகைக்கிறார். அப்போது தான் பெயர் தெரியா அம்மரத்தில் பெயர் தெரியாப்பறவையொன்று வந்தமர்ந்தது.

தூதும்,, சமாதானமும்.

அமைதிச்சாரல் கல்லெறிபட்ட தேன் கூடாய்க் கலைந்து கிடந்த வீட்டில் இரு வேறு கட்சிகளாய்ப் பிரிந்து நின்று உப்புப் பெறாத விஷயத்துக்காய் , விஷவார்த்தைகளால் சுட்டுக் கொண் டார்கள் தலைவனும் தலைவியும் . பறக்கும் தட்டுகளும் , கண்ணீர்க் குண்டுகளும் இறைந்து கிடந்த போர்க்களத்தில் , சட்டென்று ஏற்றப்பட்டது சமாதானக்கொடி ஓடிச் சென்று கட்டிக் கொண்ட மழலைத்தூதுவர்களால்.. எவர்க்காய்ப் பரிவதென்றறியாமல் மருண்டு நின்றவர்களுக்காய் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட முதுகுக்குப்பின் கைகுலுக்கிக்கொண்ட தூதுவர்களால் நிரம்பி வழிந்தது மனக்கருவூலம் வற்றாத அன்பால் ..

இளஞ்சிவப்புச் சூரியனின் அலாதி ப்ரியம்

ஆறுமுகம் முருகேசன்       "அடப்பைத்தியமே" யென கால்களை முத்தமிட்டுருந்தது நுரை கழுத்தில் சங்கிலிப் பூட்டப்பட்ட படிமநாயைப் பிடித்தவாறு என்னைக் கடக்கிறார் ஹேண்ட்ஸம் பீச் தாத்தா நான் முறைத்து அமர்ந்திருந்த கடல் திரும்பி என்னை முறைத்துக்கொண்டிருக்கிறது நீ வருகிறாய்!  

அன்புடையீர்,

                                                             25.07.2013 வணக்கம். நவீனவிருட்சம் 93வது இதழ் வெளிவந்துவிட்டது. ஒருவழியாக. கடந்த 6 மாதங்களாக முயற்சி செய்து வெளிவந்த இதழ்.  ஏன் இந்தத் தாமதம் என்ற கேள்விக்கு பதில் எதுவும் சொல்ல வரவில்லை. ஒரே கவனமாக இருந்தால் இன்னும் சீக்கிரமாக நவீன விருட்சம் இதழைக் கொண்டு வந்து விடலாம். கீழ்க்கண்ட படைப்பாளிகளின் படைப்புகள் வெளிவந்துள்ளன.  நவீன விருட்சத்தில் பங்குப்பெற்ற படைப்பாளிகள் தங்களுடைய முகவரிகளைத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். 1) தமிழில் தற்காலத் தோரணை - பாரதியின் கவிதை   2 2) பின்னற்தூக்கு - எம் ரிஷான் ஷெரீப்                                 17 3) எலிப்பந்தாயம் - சின்னப்பயல்                     ...

பிரிகிற361 நாட்கள்

ரவிஉதயன் பிரிகிற361 நாட்களை அவசர அவசரமாக 1 முத்தத்தில் சமன் செய்ய முயலுகிறார்கள் புதியதம்பதிகள் பச்சை சிக்னல் விழ ரயில் புறப்பட... நான்கு நட்சத்திரவிழிகள் மினுங்கி மின்னுகின்றன. 18 பெட்டிகள் கடந்து விட்டன ரயில் சென்றுவிட்டது. இப்போது விழுகிறது சிகப்பு சிக்னல். காத்திருக்கின்றன 361 நாட்கள் புதிய மனைவி மேலும் சிகப்பு சிக்னல்.

எதையாவது சொல்லட்டுமா....86

அழகியசிங்கர் நாமெல்லாம் நாடகப் பாத்திரங்கள்.  உலகம்தான் நாடகமேடை. வாழ்க்கை என்ற நாடகத்தில் நாம் எல்லோரும் நடித்துக்கொண்டிருக்கிறோம்.  தினம் தினம் நாம் என்ன நடிக்கிறோம் என்பது தெரியாமல் நடித்துக்கொண்டிருக்கிறோம்.  வசனம் யாரும் எழுதித் தருவதில்லை.  நாம்தான் வசனம் எழுதாமல் நடித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நாடகத்தில் நாம்தான் எல்லாம்.  ஏன் இப்படி யோசிக்கிறேன்? தங்கசாலையில் நாங்கள் குடியிருந்தபோது, குடியிருந்த வீட்டு சொந்தக்காரர் சினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்.  நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நாகேஷ் மாதிரி நடிக்க வேண்டுமென்று.  ஆனால் அது நடக்கவில்லை.  அவருக்கு அது பெரிய ஏமாற்றம் இல்லை. பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த எனக்கும் என்னைப்போல உள்ள சில நண்பர்களுக்கும் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பார்.  ஒருமுறை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடக்கும் விழாவில் நாடகம் ஒன்று அரஙகேற்றம் நடத்த வேண்டுமென்று என்னை ஒரு நாடகம் எழுதச் சொன்னார்.  எழுதவே தெரியாத நான் ஒரு நாடகம் எழுதினேன். ...

லாவண்யா

மனச்சிறை பெய்த மழையில் வனம் கடலானது வீசிய புயலில் மரங்கள் விழுந்தன மரம் விழுந்த்தில் என் கூடு  தொலைந்த்து நீரும் தீயும் என் கூடழிப்பது என் பிறவியின் சாபம் முதல் குருவி துவங்கி என்வரை சலியாமல் கட்டுகிறோம் மீண்டும் மீண்டும் கூடிழக்கும் துயரும் கூடுகட்டும் சிரம்மும் அனுபவித்தால்மட்டுமே புரியும் உலர்ந்த புற்களை மெலிந்த சுள்ளிகளை சேகரிக்கும்போது கூடு ஒரு மனச்சிறையென்று ஒரு குரல் தலைக்குள் கேட்டது. நிறுத்திவிட்டேன்.   அற்ப சந்தோஷம் குயில் கூவக்கேட்டு கனவு காணலானேன் குளிர் காற்று வீசவே மனங்குளிரலானேன் மின்னல் மின்னக்கண்டு பெரிதும் மகிழ்ந்து போனேன் கருமுகிற்கூட்டம் வரவே களிப்படையலானேன் அற்ப சந்தோஷத்தில் ஏமாந்து போனேன்.  

நிரந்தரத்தின் தரிசனம்

  ஆறுமுகம் முருகேசன் அடைக்கப்பட்டக் குழாயிலிருந்து ஒவ்வொருச் சொட்டாய் நீர் தரைமோதி மேலெழும்பும் சப்தமென நம் இரவை கலைத்து அடுக்குகிறேன் செவிலித்தாய் ஒத்த ப்ரிய ரேகைகளின் வழி எதிர்ப்பெதுவுமின்றி மிடறு மிடறாய் தரிசிக்கிறாய் நீ ! தடதடத்த பின்னங்கழுக்து படபடப்பில் தப்பிக்க முயன்ற எறும்பினை வலிவலிக்காத வண்ணம் கைப்பற்றுகிறோம் பின் மெதுவாக அசைவுறுகிறோம் மிதந்து நிமிரும்பொழுது தற்காலிகமாக வெளியேறியிருந்தது எறும்பு ***

நகரத்துப் பசுக்கள்

Ganesh V தீனீ போட்டு கட்டுப்படியாகாமல் விரட்டப்பட்ட நோஞ்சான் பசுக்கள் தெருக்களில் திரிந்தன வெள்ளைப் பசு முள்மரங்களை சுவாசம் பிடித்த படி நின்றது மஞ்சள் பசு சாலையோரங்களில் போடப்பட்ட கற்குவியற்களை நக்குகிறது வெள்ளைப்பசுவின் இளங்கன்று பிளாஸ்டிக் குப்பைகளை ஆர்வத்துடன் நோக்குகிறது மாலை வீடு திரும்பாத பசுக்களைத் தேடி வந்த உரிமையாளன் மயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை லாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான். இப்போதெலாம் பசுக்கள் வீதிகளில் அலைவதில்லை நவநாகரீக கோசாலையில் சுகமாய்க் காலங் கழிக்கின்றன காசு கொடுத்து பசுக்களுக்கு உணவூட்டிச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள் இன்னுமொரு கிளை திறப்பதற்காக உரிமையாளன் கிராமத்திலிருந்து மேலும் பசுக்களை நகருக்கு அழைத்து வருகிறான்.

இலையின் இயல்பற்ற இதயம்

க.உதயகுமார் நதிவழி நீந்தும் இலைபோல் லாவகம் வருவதில்லை விதிவழி வற்றும் வாழ்வில் ஓவியத்தின் கண்களென நிலைகுத்தியே நிற்கிறது துயர் சன்னமாய் விரிசல் விட்டு சுக்குநூறாய் உடைகிறது கண்ணாடி மனசு இலைகளுக்கு எப்படி இவ்வளவு எளிதாக இருக்கிறது தன்னை விடுவித்துக் கொண்டு சுதந்திரமாய் சுற்றித் திரிய ? மெலிதாய் விழவும் ஒரு மழைக்குமுன்னதான காற்றில் ஈரமாய் எழவும் இலையின் இயல்பற்ற இதயத்தால் முடிவதில்லை பச்சை காய்ந்து பழுப்பு மினுங்கும் பருவத்தே நானுமோர் இலையாவேன் என்ற எதிர்பார்ப்பு இல்லாமலில்லை

அறுபதாம் தோட்டத்து மரண ஊர்வலம்

மொழிபெயர்ப்புக் கவிதை கரங்களைக் கோர்த்து இரு வரிசையில் முகத்துக்கு முகம் பார்த்தபடி ஏழெட்டு வீடுகளையேனும் ஒழுங்காகக் கட்டிட முடியாத நில மொன்றில் நெருங்கியடித்து த் தம்மை நுழைத்துக் கொண்ட அறுபது வீடுகள் அவற்றின் மத்தியால் செல் லும் முச்சக்கர வண்டியொன்றேனும் பயணி த்திட முடியாத குறுகிய ஒழுங்கையின் இருமருங்கிலும் இரண்டு வரிசைகளில் போடப்பட்டுள்ளன ப்ளாஸ்டிக் கதிரைகள் ஒரே விதமாகத் திறந்தே கிடக்கின்றன எல்லா வீடுகளின் யன்னல்களும் கதவுகளும் அமர்ந்திருக்கின்றனர் எல்லா வீட்டு முற்றங்களிலும் வருபவர்கள் எல்லோரும் அறுபதாம் தோட்டத்தில் வசித்த மூத்த குடியவள் எவர்க்குப் பசியெனினும் உண்ண உணவு கொடுத் து எல் லோரது துயரத் துக்கும் ஒன்றுபோலவே செவிமடுத்த வள் முழு அறுபதாம் தோட்டத்துக்கும் அம்மா அவள் பாட்டியவள் எண்பத்தைந்து வருடங்க ளாக து யர த்தை மட்டுமே அனுபவித்திருந்தாலும் விழிகளிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் வழியவிடாது எந்த நோய் நொடியும் தீண் டிடாது ஒரு மலை , ஒரு பெருவிருட்சம் போன்றிருந்த ...