If there are images in this attachment, they will not be displayed. Download the original attachment அமுதாக்கா இறந்துவிட்டாள் காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழுந்து வெளியே வந்து பார்த்தபோது வானம் இருண்டிருந்தது மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது எதிரே கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில் 27.09.2009 அன்று அமுதாக்கா இறந்துவிட்டதாகச் செய்தி இருந்தது ஆம் அமுதாக்கா இறந்துவிட்டாள் 27.09.2009 திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் அமுதாக்கா தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போனாள் அவள் சாவுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன பல ஊகங்களும் உலவுகின்றன அமுதாக்காவை எனக்கு நன்றாகத் தெரியும் அவள் ஒரு பெண் குழந்தையின் தாய் முருகனின் அழகு மனைவி சுந்தர பெருமாளின் அன்பான கள்ளக்காதலி எங்கள் தெருவின் சிறந்த அழகி அமுதாக்காவை முதன்முதலில் தேநீர் கடையில் நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது பார்த்தது இடுப்பில் குழந்தையுடன் சொம்பில் தேநீர் வாங்க வந்தவளை நண்பர்கள் நமட்டுச் சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க நா...