Skip to main content

Posts

Showing posts from October, 2012
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு     அழகியசிங்கர் 9.   நன்றாக கவனித்துக்கொண்டார்கள்.  யாரும் இப்படி கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.  நான் யார்? அவர்கள் யார்? இந்தக் காலத்தில் உறவுமுறைகள் எல்லாம் கேலிக்குரிய ஒன்றாக மாறிவிட்டது.   உற்சாகமாக எனக்கு வனஜா சமையல் செய்து போட்டதை நான் மறக்க முடியாது.  எனக்குத் தோன்றியது.  இந்த பெரியம்மா, பெரியப்பா உயிரோடு இருந்திருக்கும்போது நான் வந்திருக்கக் கூடாதா என்று.  அப்போது வந்திருந்தால் அவர்களை என் கூடவே இருந்திருக்கச் சொல்லியிருப்பேன். வனஜாவைப் பற்றி எப்படிச் சொன்னாலும், அவள் என்னிடம் அன்பாக இருந்தாள். ஒவ்வொரு முறையும் வாய்நிறைய ''அண்ணா, அண்ணா'' என்று கூப்பிடுவாள்.  என் பெரியப்பா பையன் மூர்த்தி அவ்வளவாகப் பேச மாட்டான்.  ஏன் பேசத் தெரியாது.   நான் பந்தநல்லூருக்கு வந்த அடுத்தநாள், மயூரநாதர்  கோயிலுக்குக் காலையில் சென்றேன்.  தனியாகத்தான்.  அந்தக் காலை நேரத்தில் அந்தக் கோயில் ஹோ என்றிருந்தது.  அம்மன் சந்நிதிக்குப் போய் நின்றேன்.  யாருமில்லை....
          நானும் அசோகமித்திரனும்....     அழகியசிங்கர்     அசோகமித்திரனை நான் எப்போது சந்தித்தேன்.  அவரை முதலில் சந்தித்தேனா அல்லது அவரைப் பற்றி எப்போது எந்தச் சந்தர்ப்பத்தில் அறிந்துகொண்டேன்.  இந்தக் கேள்விகளுக்குமுன்னால், நான் நூல்நிலையத்தில் அதிகமாகப் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்.  ஒவ்வொரு முறையும் நூல் நிலையம் போகும்போது எனக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துப் படித்துக்கொண்டிருப்பேன்.  ஒருமுறை என்ன சிறுகதைத் தொகுப்பு என்பது ஞாபகம் இல்லை.  அசோகமித்திரன் என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதியைப் பார்த்தேன்.  மிகத் தயக்கத்துடன் எடுத்து வைத்துக்கொண்டேன்.  அத் தொகுப்பில் கதைகள் எல்லாம் சின்ன சின்ன கதைகளாக இருக்கும்போல் தோன்றியது.  அப்போது எனக்கு அறிமுகமான எழுத்தாளர்கள்.  சுஜாதா,இந்திரா பார்த்தசாரதி, கல்கி, நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், அகிலன் போன்ற எழுத்தாளர்கள்தான்.  முதன் முதலாக அசோகமித்திரனை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  ஆரம்பத்தில் எனக்கு ஒன்று...
சிறுவன் முடிவேயற்று மிகவும் நீண்ட அந்தப் பேரூந்துப் பயணத்தில் வாந்தியெடுத்த, காய்ச்சலுக்கு தெருவோரக் கடையொன்றில் தேயிலைச் சாயம் குடித்த, அப்பாவைத் தேடி அம்மாவுடன் *பூஸாவுக்குச் சென்ற... கல்லெறிந்து மாங்காய்ப் பிஞ்சுகளை பையன்கள் பறித்துப் போகையில் அவர்களுக்கொரு பாடம் புகட்டிட அப்பா இல்லாததால் உதடுகளைக் கடித்து பெருமூச்சைச் சிறைப்படுத்திக் கொண்ட... ஒருபோதும் தான் காண அழாத அம்மா மறைவாக அழுவதைக் கண்டு உறங்காமல் உறங்குவது போல் தலையணை நனைய அழுத... ஆற்றில் சுழிகள் உடையும் விதத்தை இரவுப் பூக்கள் மலரும் விதத்தை நட்சத்திரங்கள் உதிர்ந்து வீழும் விதத்தை தன்னந்தனியாகப் பார்த்திருந்த... எவ்வளவு துரத்தியும் போகாத அந்தக் கருத்த, ஒல்லியான, விடலைச் சிறுவன் இருக்கிறான் இன்னும் நள்ளிரவில் விழித்து அவன் அவ்வப்போது தனியாக அழுகிறான் ஈரமாகிறது எனது தலையணை * பூஸா - இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களின் சிறைச்சாலை அமைந்திருக்கும் இடம் இஸுரு சாமர ச...
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு அழகியசிங்கர் 8. நான் அலுவலகத்தில் நுழைந்தவுடன், 'பெரிய முட்டாள்தனம் செய்து விட்டாய்,' என்றான் மூர்த்தி. ''என்ன'' என்றேன்.  ''பிரமோஷனில் வந்ததைத்தான் சொல்றேன்..''  மூர்த்தி மயிலாடுதுறையைச் சார்ந்தவன்.  பதவி உயர்வுப் பெற்று வடக்கு இந்தியாவிற்குச் சென்றுவிட்டு ஓய்ந்துபோய் பந்தநல்லூரில் ஒடுங்கி உள்ளவன்.  நான் வந்ததால் அவனை வேறு எங்காவது மாற்றி விடுவார்கள்.   வங்கி மேலாளர் சற்று உற்சாகமில்லாமல் இருந்தார்.  ஒரே ஒரு பெண்மணியைத் தவிர வேற யாருமில்லை அந்தக் கிளையில்.  நான் சென்னையிலிருந்து வந்த பரபரப்பில் இருந்தேன்.  மனம் தெளிவில்லாமல் இருந்தது.  ஊர் சற்றுக்கூட பிடிக்கவில்லை. நெரிசல் மிகுந்த சென்னையை விட்டு வந்து விட்டோமே என்று தோன்றியது. மேலும் நான் சுருக்கெழுத்தாளராக இருந்துவிட்டு வந்திருப்பதால், கிளை அலுவலகத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஜானகி என்கிற அந்தப் பெண்மணி சற்று ஆறுதலாகப் பேசினாள்.  ''ஏன் சார் இங்க வந்து மாட்டிண்டீங்க?'' என்றாள்.  எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவ...
அறிவிப்பு நவீன விருட்சம் 91வது இதழ் ஒரு வழியாக ஓராண்டிற்குப் பிறகு அச்சில் வெளிவந்துவிட்டது.  இதழில் பங்குகொண்ட படைப்பாளிகளின் அட்டவணை இதோ- 1. முகப்போவியம் எஸ் வைதீஸ்வரன் 2. பூனைக்குட்டியும் நிலாவும் - கவிதை - குமரி எஸ் நீலகண்டன் 3. தாகம் - கவிதை - சின்னப்பயல் 4. சிறகுகள் ஸ்தம்பித்ததன் பின்னான சிறுவெளி - கவிதை - ப தியாகு 5. கடந்தது - கவிதை - எஸ் வைத்தியநாதன் 6. கார்க்கால ஞாபகங்கள் - கவிதை - சமீலா யூசுப் அலி 7. புதிய அத்தியாயம் - கவிதை - ராமலஷ்மி 8. சில நேரங்களில் - கவிதை - மிருணா 9. பூனை - கவிதை - அழகியசிங்கர் 10. ஒரு - கவிதை - அழகியசிங்கர் 11. தேடிப்பற - கவிதை - ஷைலஜா 12. குட்டி குட்டி அழகு - ப ஜெயபால் 13. எது கவிதை.... - கட்டுரை - அழகியசிங்கர் 14. கறுப்பு - வெள்ளை - கவிதை - நீலமணி 15. பானகம் - சிறுகதை - ஷைலஜா 16. இருபது ரூபாய் - சிறுகதை - அழகியசிங்கர் 17. எப்போதும் உனக்குத் தேவை அமைதியான மனம் - நிஸகர்தத்தா மஹாராஜா 18. எனக்குப்பிடித்த முன்னுரை 19. என் எம் பதி என்கிற நண்பர்.... அழகியசிங்கர் 20. ஐராவதம் புத்தக விமர்சனம் உரையாடல் 91வது இதழில் கலந்துக...
அம்மாவின் மோதிரம் எம் . ரிஷான் ஷெரீப் , இலங்கை . அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது . அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது . அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது . அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள் . அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது . முதலில் அவன் அந்த மோதிரத்தை இது குறித்துச் சந்தேகப்படவில்லை . அதுவும் சாதுவான பிராணியொன்றின் உறக்கத்தைப் போல அவனது மோதிரவிரலில் மௌனமாக அழகு காட்டிக் கொண்டிருந்தது . அவனுக்கு ஆபரணங்கள் மேல் எவ்விதமான ஈர்ப்புமில்லை . அவனது தாய் , பரம்பரைப் பொக்கிஷமாக வந்த அந்த மோதிரத்தைப் பாதுகாத்து வைத்திருந்து அவனுக்கு இருபத்து மூன்றாம் வயது பிறந்தபொழுதில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி அத...