Skip to main content

Posts

Showing posts from April, 2010

மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்

இருப்புக்கருகே மூர்க்கத்தனத்தோடு பெரும் நதி நகரும் ஓசையைக் கொண்டுவருகிறது கூரையோடுகளில் பெய்யும் ஒவ்வோர் அடர்மழையும் வீரியமிக்க மின்னலடிக்கும்போதெல்லாம் திரள்முகில் வானில் இராநிலாத் தேடி யன்னலின் இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும் பிஞ்சு விரல்களை அழுது கதற விடுவித்துக் கொண்டோடுகிறாள் குழந்தையின் தாய் தொடர்ந்து விழும் இடி ஏதோ ஒரு நெடிய மரத்தை எரித்து அணைய நீயோ இடி மின்னலை விடவும் கொடிய காதலைப் பற்றியிருந்தாய் துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும் கருணை மிகுந்த ஓர் கரம்

வரம்

ஒரு ஊரில் ஒரு மீனவன். மிகவும் ஏழை, ஆனால் அறிவாளி. ஒரு நாள் அவன் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபொழுது, அவன் வலையில் ஒரு ஜாடி அகப்பட்டது. அதை திறந்ததும் ஒரு பெரிய பூதம் வந்தது.வெளியே வந்த பூதம்,"என்னை விடுதலை செய்த உனக்கு இரண்டு வரம் தருகிறேன். கேள்." என்றது. மீனவன் சிறிது யோசித்துவிட்டு "எனக்கு நூறு கோடி ரூபாய் வேண்டும். இதுதான் முதல் வரம்." பூதம், "சரி. இரண்டாவது வரம்?" மீனவன், "இன்னும் இரண்டு வரம் வேண்டும்."-

அம்மா மாதிரி (சிறுகதை)#

01வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ஏன் அப்பா இப்படியெல்லாம் செய்கிறார்? என்ன செய்தாலும் என்னால் அதை தடுக்கவா முடியும்? பன்னிரண்டு வயது பையனால் என்ன செய்ய முடியும்? இவர் இப்படியெல்லாம் செய்வாரென்று தெரிந்துதான் அம்மா முன்னாடியே போய்விட்டாளா? அம்மாவை நினைத்ததும் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அம்மாதான் எவ்வளவு அன்பாக இருந்தாள்? சாந்தமான அந்த முகம். எதைக் கேட்டாலும் வாங்கித் தரும் கனிவு. "அம்மா தாயே" என்று யாராவது பிச்சைக்காரர்கள் வந்தால் அவர்களுக்கு அரிசியோ, காசோ ஏதாவது கொடுத்தனுப்பும் அந்த பரிவு. அம்மா நிஜமாகவே ரொம்ப நல்லவள். அப்பா அப்போதெல்லாம் நன்றாகத்தான் இருந்தார். அம்மாவிடமும் எங்களிடமும் அன்பாக இருப்பார். அடிக்கடி எதையாவது சொல்லி சிரிப்பு வரவழைத்தபடி இருப்பார். எனக்கும் தம்பி தங்கச்சிக்கும் வெளியே எங்காவது போனால் கண்டிப்பாக ஐஸ்க்ரீம் வாங்கித் தருவார். அம்மா அப்பாவோடு நான் தம்பி தங்கச்சி எல்லோரும் சினிமா போவோம். சாயங்காலம் ஆனால் அம்மா எல்லோரையும் உட்காரச் சொல்லி படிக்கச் சொல்லுவாள். தங்கச்சி பாப்பாவுக்கு ஏ பி சி டி சொல்லிக் கொடுக்கும்போது அப்படியே...

Chickens - A Short story

A short story CHICKENS I t has been written on that board that ‘country chickens and broiler chickens are available here – live and dressed.’ Next to it a couple of chickens and an egg had been drawn. One side of the board has prices of them marked in Kg’s and grams. Above all, it has been clearly written as ‘Sri Devi chicken stall’ in English and in Tamil, along with the sub title of ‘protein shop.’ There were many white-feathered chickens in those thin coops inside the shop. Some of them were standing while some were moving here and there, looking vaguely and yet few others were eating Ragi* that’s been kept in small aluminium bowls. A piece of wood stalk has been laid in front of the shop. On it, a knife has been put with bloodstains in it. Nearer were a big cauldron, small bowls, and a wastebasket with torn feathers, chickens crests and talons. The shopkeeper was standing outside and smoking beedi*. The shop emitted a stale odour that belongs to only a chicken coop, which ma...

FURTHER POEMS

(Translations-continued) (Part III) Disclamer and Copy Rights: These translations are done with at most care but still need corrections. The translator tried to get very closer with the translations to the originals and is still trying. Suggestions and corrections are welcome. About copy Right: These translations and other works/writings in this blogspot is copy righted and prior permission is needed to publish it elsewhere. Raa Srinivasan 25th April 2010 Room space I woke up thinking I have escaped I saw all around. Up there Sky: all the four sides’ flowery dark None of the roof, walls. Paths appeared all the sides. Thinking this the open space itself, not a room For some moments my mind surged. I walked west dashed a wall I walked south dashed a wall I walked north dashed a wall I walked east dashed a wall I jumped up dashed the roof. -C. Mani The cloud that the little bird brings There When the cloud That the little bird brings Fills me coolly I Will cease to be. You can take my sh...

பெண் கவிஞர்களின் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

ஏவாளின் உரையாடல் கேரில்டா ஆலிவர் லேப்ரா (க்யூபா) இன்று, உன்னை முரட்டுத்தனமாக வரவேற்கிறேன். ஒரு உறுமலுடன் அல்லது ஒரு உதையுடன். எங்கே ஔதந்துகொண்டிருக்கிறாய், இதயங்கள் நிரம்பி வழியும் உனது காட்டுத்தனமான பெட்டியுடன்஢, நீண்டோ டும் உனது வெடி மருந்துடன் எங்கே ஓடிப்போனாய்? இப்போது எங்கே இருக்கிறாய்; எல்லாக் கனவுகளும் கடைசியாக சுண்டி எறியப்படும் சாக்கடைக்குள்ளா, அல்லது தகப்பனற்ற குழந்தைகள் ஊசலாடிக் கொண்டிருக்கும் வனத்தின் சிலந்தி போன்ற வலையிலா? உன் நினைவாகவே இருக்கிறேன், உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேனென்று உனக்கும் தெரியும் - என்னையே போல் ஒருபோதும் நிகழாத அற்புதத்தைப் போல் - ஏங்குகிறேனென்று உனக்கும் தெரியுமில்லையா? ஒருபோதும் அறிந்திராத மகிழ்ச்சியால் உன்னைக் கவர்ந்திழுக்க விரும்புகிறேன், ஒரு விவேகமற்ற காதல் விவகாரம். எப்போது என்னிடம் வருவாய்? விளையாட்டேதும் விளையாட வேண்டுமென்ற ஆதங்கத்஢தோடில்லை நான், உன்னிடம் ஒப்படைக்க வேண்டும்; ''எனது வாழ்வை'' -- நம்மை இடி பணிவுபடுத்த, ஆரஞ்சுகள் உனது கைகளில் வௌதறிப்போக, நான் உனது ஆழங்களில் தேடி இறுதியாகத் தீப்பிழம்பில் மறையும் திரைகளையும் பு...

புள்ளி என்ற பெயரில் சின்ன கவிதைத் தொகுதி..

அக்ரகாரத்துக் கதவுகள் எங்களூர் அக்ரகாரத்தில் அதிசியங்கள் ஆயிரம் உண்டு செம்மண் பட்டையிட்டு செங்காவிச் செறிவீச்சில் கொலுவிருக்கும் வீடுகளின் ஜன்னல்களுக்கோ கதவுகளே இல்லை ஆனாலும் டெர்ரிக்காட் பளபளப்பில் குதிகால் நடையுயர்த்தி நட்ட நடுத்தெருவில் நீள நடந்தால் கறுப்பு சிவப்பு பழுப்பு மாநிறப் பரபரப்பு முகங்கள் கதவுகளாய் முளைக்கும் - நா. விச்வநாதன்

பூனைகள் பூனைகள் பூனைகள் 21

பூனைக் காவல் குமரி எஸ்.நீலகண்டன் என்னை அறியாமலேயே என்னுள் ஏழெட்டுப் பூனைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. எலியைக் கண்டதும் எட்டிப் பாய்ந்தது அந்தக் கருப்புப் பூனை. பாலைக் கண்டு பதுங்கி வந்தது அந்த பரம சாதுப் பூனை. உருட்டுக் கண்களுடன் உற்றுப் பார்த்தது அந்த உளவுப் பூனை என்னுள் எங்கோ உறு உறுவென்று உறுமிக் கொண்டே ஒளிந்திருக்கிறது இன்னொரு பூனை என் மீசையை தன் மீசையாக்கிக் கொள்கிறது அந்த தளர்ந்த பூனை குதித்து குதித்து குதூகலித்து கும்மாளமிடுகின்றன இன்னும் சில குட்டிப் பூனைகள் நான் கோபத்தில் பதுங்கி பதுங்கிப் பாய்கையில் யாரும் என்னைக் கண்டு பயப்படாமல் காவல் காக்கின்றன இந்த பூனைகள் திருட்டு விழிகளுடன்

ஆட்டுவித்தால் யாரொருவர்

அன்புள்ள அம்மா, ஊரிலிருந்து வந்தவுடன் எழுதுவதாகக் கூறிவிட்டு மூன்று நாட்கள் கழித்துதான் எழுத முடிந்தது. கோபிக்காதே. டெலிபோனில் கூப்பிட்டால் அவசரமாகப் பேச வேண்டும். எவ்வளவோ சொல்ல வேண்டியுள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன். அப்பா இறந்தவுடன் கிட்டு மாமா வந்து போனதாக நீ சொன்னபோது, அவர் முகம் நினைவுக்கு வரவில்லை. நேரில் பார்த்ததும், நினைவு வந்தது. அவர் உன் மீது உயிரையே வைத்திருக்கிறார். "இனிமே இது உன்னோட வீடு ... தெரிஞ்சுதா? நான் வேலை வங்கித் தர்றேன்." என சந்தோஷப் பட்டார். சீக்கிரமே வேலை கிடைத்து அப்பாவுடைய கடனை எல்லாம் தீர்க்கத்தான் போகிறேன். உடம்பை கவனித்துக்கொள். கவலைப்படாதே. அன்புடன், சிவா. *************************** சிவாவின் டயரியில்: அம்மா, உன்னிடம் பொய் சொல்ல மனம் வராததால் இதை டயரியில் எழுதுகிறேன். என்னை மன்னித்து விடு அம்மா. இதுதான் உண்மை. மாமா வீட்டில் நுழைந்த மறுகணமே, மாமி "என்னப்பா திடீர்னு?" என்றாள். மாமாவிடம் போனில் பேசிய விஷயம் ஆபீசோடு நின்று விட்டது. கண் ஜாடை காட்டிய மாமாவைப் பார்த்தபடி, "சும்மாதான் வந்திருக்கேன்" என சமாளித்தேன். ...

முன் முடிவுகளற்று இருப்பது

எப்போதாவது என்றால் சரி. எங்காவது ஒருமுறை என்றால் சரி. யாராவது ஒருமுறை எனில் சரி நடைபெற்ற யாவற்றிலும் நாம் இருவருமே பங்கு பெற்றிருக்க பிரச்சினை என்றவுடன் பின்வாங்கி நிற்கும் உங் களிடம் பெரிதாய் வருத்தமேதுமில்லை எனக்கு. எதையுமே அறியாத தோற்றம் தரும் உங்களின் முக ம் குறித்தும் எனக்கு முழு சம்மதமே. எல்லாப் பிரச்சனைக்கும் என்னை நோக்கி நீளும் உங்கள் கைகளைப் பற்றிக் குலுக்க இப்பொழுதும் எனக்கு சம்மதம். ஆயினும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் நான் இப்போது. முடிவொன்று தேவையா என்றாவது முடிவு செய்ய வேண்டும். முன் செய்த முடிவுகளெல்லாம் முடிவில் இப்படி எப்படியோ ஆகிக்கொண்டிருக்க முன் முடிவுகளற்று இருப்பதைப் பற்றி முழு மூச்சாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்

அவன் தன் வேட்டைப்பற்களை மறைக்க தேவதூதனையொத்தவொரு அழகிய முகமூடியைத் தன் அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட பின்னரான பொழுதொன்றில்தான் அவள் அவனைப் பார்த்தாளெனினும் ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும் அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை அக்கழுகு அழகிய பெண்களின் மாமிசப்பட்சி அவர்தம் வாழ்வினைக் கொழுவி உயிர் எஞ்சத் துண்டுகளாய் வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும் கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள் அவள் செந்தாமரை மலரொத்தவொரு தேவதைக்குப் பிறந்தவள் ஏழ்மையெனும் சேற்றுக்குள் வனப்பு நிறைக்க மலர்ந்தவள் அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா அப்பாவிப்பெண்ணக் கழுகின் கூர்விழிகளுக்குள் விழுந்தவள் சுவனக் கன்னியையொத்த தூய்மையைக் கொண்டவளின் கவனம் பிசகிய கணமொன்றிலவன் கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள் மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று என்றுமே உணர்ந்திராதவொரு விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று நேசத்தினைச் சொல்லிச் சொல்லி அவளது சதைகளை அவ்விஷப்பட்சி தின்றரித்து முடிந்தவேளையில் வாழ்வில் காணாவொரு துயரத்தை அவள் கண்கள்...

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......20

மீனுவும் பூனையும் குமரி எஸ்.நீலகண்டன் மீனு அவளது அம்மாவிடம் அநியாயத்திற்கு கோபப்படுவாள். அம்மாவைப் பற்றியே அம்மாவைப் பிடிக்காதவர்களிடம் ஆயிரம் குசும்பு சொல்லி இருக்கிறாள் கணவன் ஏதாவது சொன்னால் பாம்பாய் படமெடுப்பாள் மாமியாரிடம் மணிக் கணக்கில் சண்டை போடுவாள் அவளை யாரும் குத்தம் சொன்னால் கொத்துகிற பாம்பாய் விஷத்தை பீய்ச்சுவாள் ஆனால் மீனு அவளது பூனையுடன் மட்டும் மிகுந்த அன்பு காட்டுவாள். அதற்கு நேரம் தவறாமல் பால் கொடுப்பாள் அதன் பஞ்சு போன்ற முதுகைத் தடவிக் கொடுப்பாள். அதனை ஷாம்பு போட்டு நாள் தவறாமல் குளிப்பாட்டுவாள். பூனையோடு கொஞ்சியும் விளையாடுவாள் பூனையின் காலில் ஏற்பட்ட சிறிய காயத்திற்காக அண்டை அயலாரிடம் ஐயோ பாவம் ஐயோ பாவமென துக்கித்து துவண்டு போனாள். எல்லோரும் அந்த பூனையை பதுங்கி பதுங்கி ஒரு திருட்டுப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

பூனைக் கனவு

பிரசவ அறையின் வெளியே களைப்புடன் திகைப்புடன் அரை தூக்கத்தில் காத்திருந்த என்னுள் என்னை மீறி ஒரு கனவு உளவு பார்த்தது. அதில் ஒரு பூனை பதுங்கி பதுங்கி வந்தது. விழிகளில் ஒளி மிளிர வீலென்று கத்திற்று அந்த பூனை. அதற்குள் சார் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குது என்று என்னைத் தட்டி எழுப்பி செய்தி சொன்னாள் அந்த மருத்துவமனை தாதி.

கியான் (சிறுகதை)

கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம் தன் பிள்ளைபற்றிய இழிபுராணதைப்பாடிக்கொண்டிருந்தார். டீக்கடை கோவிந்தன் சூடான பாலை டிகாக்சனில் கலப்பதிலேயே மும்முரமாய் இருந்தான். பார்பர்ஷாப் முருகன் வாடிக்கையாளர் முகத்தில் சோப்பை போட்டுக்கொண்டிருந்தான்.தெருவோர நாய் ஒன்று யாரையோ பார்த்து ஆக்ரோசமாய் குலைத்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாரையும் அந்த செய்தி பாதித்ததாய் தெரியவில்லை. கியான் அப்படி ஒன்றும் அத்தனை பிரபலமான ஆளில்லை. சிறுபிள்ளைகளுக்கு அவள் ஒரு விளையாட்டுப் பொருள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவள் ஒரு பரிகாசப் பொருள். பெரியவர்களுக்கு அவளொரு பரிதாப ஜீவன். சுருங்கச் சொன்னால் கியான் ஒரு மனநிலை சரியில்லாதவள். ஊராரின் வார்த்தையில் 'பைத்தியம்'. கியான் மற்றவர்களைப் போலில்லை. திடீர் திடீரென்று சிரிக்கின்ற ரகமோ, கையில் கிடைத்ததை எடுத்து வீசுகின்ற ரகமோ இல்லை. எப்போதும்...

" விண்ணைதண்டி வருவாயா "

இந்த படத்தை பார்த்து கிட்ட திட்டஒரு மாதம் ஆகி விட்டது , இதை பற்றி, கேட்ட வரையிலும் சரி, நெட்டில் படித்த வரையிலும் , ஆஹா ஓஹோஎன்றுதான் கேள்வி! (எதாவது மிஸ் ஆகிருக்கும் !) படம் ஆரம்பிக்கும் பொழுதே சிம்பு பின்னணியில் பேச ( அனேகமாக கௌதம் படங்களில் இது பொதுவகிவிட்டது ) வாரனம் ஆயிரம் பாகம் இரண்டோ என்று தோன்ற ஆரம்பித்தது, இதை எதோ Latest Trend என்று, ஒரு விமர்சகர் சிலகிதிருந்தார் . கிட்ட திட்ட 75 ஆண்டுகள் கழிந்தும் நமக்கு , சினிமா என்ற கலைவடிவம் பிடிபடவில்லையோ என்று தோன்றுகிறது. காட்டி உணர்த்த வேண்டியதை பின்னணியில் நீண்ட விளக்க உரை கொடுக்க நேர்ந்தால் அதை சினிமாவின் தோல்வி என்றே எண்ண தோன்றுகிறது. மீண்டும் சளைக்காத காதல். (என் நண்பன் ஒருவன் இந்த படத்தை லவ் பன்ன ஒருவரால்தான் ரசிக்க முடியும் என்ற விளக்கம் கொடுத்தான்) . எனக்கு இதில் ஒரு வியாபார சூட்சமம் முக்கியமாகபடுகிறது, இன்று திரைக்கு சென்று சினிமா பார்பவர்கள் 15-35 வயதினர், இவர்களுக்கு காதலை வித்தியாசமாக சொன்னால் படம் ஹிட் ! எனக்கு இது போன்ற படங்களில் முதலில் இருந்தே இதன் யதார்த்த தன்மை பற்றிய கேள்விகள் தோன்ற ஆரம்பித்து விடுவதால் படத்தின் உள்ளே ...

எதையாவது சொல்லட்டுமா.19

'இன்ன பிறவும்' என்ற செல்வராஜ் ஜெகதீசன் கவிதைத் தொகுதியைப் பற்றி சொல்வதற்குமுன் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். அவருடைய முதல் கவிதைத் தொகுதி பற்றி சொல்லி முடிப்பதற்குள் அவரது இரண்டாவது தொகுதி வந்து விட்டது. நான் இந்தத் தொகுதியைப் பற்றி சொல்வதற்குமுன் அவர் இன்னொரு தொகுதிக்கான கவிதைகளை அலுப்பில்லாமல் எழுதிக் கொண்டிருப்பார். இதுதான் ஆபத்து. கவிதை எழுதுவது, எழுதுகிற கவிதைகளைப் புத்தகமாகப் போடுவது, பின் அது குறித்து அபிப்பிராயம் எதிர்பார்ப்பது. வேறு என்ன செய்யமுடியும்? கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். ஆத்மாநாம் சின்ட்ரமுக்குள் கவிஞர்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது. அது என்னவென்று சொல்கிறேன். எல்லோரும் போல் ஆத்மாநாமும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். மனச்சிதைவுக்கு அவர் ஆட்பட்டபோது, அவருடைய பிரச்சினை என்னவென்றால் 'உடனடி புகழ்'. ஆத்மாநாமின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்த கருத்து இது. புகழ் என்பதே மாயை. இது எப்படி சாத்தியமாகும்? ஆத்மாநாம் காலத்தில் புத்தகம் போடுவது சிரமம், படிப்பவர்கள் யாரென்று கண்டு பிடிப்பது சிரமம், மேலும் படித்து கவிதைகளைப் புகழ்ந்த...