1. முகம் விபத்தில் அடிபட்டவனைத் தூக்கிச் செல்லும் அவசர ஊர்தி கடந்துபோனது வெட்டப்பட்ட வாழைமரமெனத் தொங்கிய உடல்முழுதும் ரத்தக்கோலம் அவன் உயிர்பிழைத்துவிட வேண்டுமென மனமுருக வேண்டிக்கொண்டேன் என் பயணம் முழுதும் நிழலென மிதந்துகொண்டிருந்தது அவன் சிதைந்த முகம் அவன் காதலி அவன் அலுவலகம் அவனை நம்பியிருக்கும் தம்பிதங்கைகள் எல்லாரைப் பற்றியும் நினைவு வந்தது அவன் உயிர் மிகமுக்கியமானது என்று சொல்லிக்கொண்டேன் ஆறுதலாக ஒரு சொல் மிதக்க அஞ்சவைத்து மிதந்தது மற்றொரு சொல் பத்தாண்டுகளுக்கு முன்பாக விபத்தில் அடிபட்டு இறந்துபோன நண்பனின் முகம் நினைவில் படர்ந்தது அரள விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்துகொண்ட பள்ளித் தோழியின் முகமும் அசைந்தெழந்தது அகால மரணமடைந்தவர்கள் ஒவ்வொருவராக ஆழ்மனத்திலிருந்து எழுந்து வந்தார்கள் துயரம் படர்ந்த முகங்களுடன் என்னைச் சுற்றி சூழ்ந்து கொண்டார்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் பேசினார்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டார்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் கண்ணீர்விட்டு அழுதார்கள் ஐயோ போதுமே என்று காதுகளை மூடி நிமிர்ந்தபோது உதடுகள் அசையாமல் உற்றுப் பார்த்த விபத்தில் சிதைந்த முகம்கண்டு உற...