Skip to main content

Posts

Showing posts from November, 2021

அழகியசிங்கரின் மூன்று கவிதைகள்

    1. எழுதுபவனின் பரிதாப நிலை   குடும்பத்தில் யாராவது ஒருவராவது படிப்பார்களா என்று எதிர்பார்த்தேன் பெரிய ஏமாற்றம் அவர்கள் முன் நான் எழுதிய தாள்கள் பிரிக்கப்படாமலிருந்தன   நண்பர்கள் கண்ணைக் கசக்கி வாசிப்பார்கள் என்று நம்பினேன் ஓட ஓட விரட்டுகிறார்கள்   வாசகர்கள் வரவேற்பார்கள் என்று நம்பினேன் அவர்கள் யாரும் கண்ணில் தட்டுப்படவில்லை   நானே எடுத்து வைத்துக்கொண்டு நானே படிக்கிறேன் படிக்கிறேன் பரவசம் அடைகிறேன்.   2.        காதல் வாழ்க   கையில் வாளை எடுங்கள் சுழற்றுங்கள் ஜாதி சண்டைகள் ஒழியட்டுமென்று   ஏற்றத் தாழ்வு தூய காதலுக்கு முன் எங்கே   இன்றையத் தேவை அன்பின் பெரும் வெள்ளம்   நம்மிடம் ஆற்றல் இருக்கிறது நிமிர்ந்து நிற்க   பற்று இருக்கிறது காதல் கொள்ள   காதல் பரவசம் கொள்ள பெண்ணும் தட்டுப் படுகிறாள்   வெற்றிப்   பரவசத்தில் மூழ்கித் தவியுங்கள   காதல் வாழ்க காதல் வாழ்க வென்று                   கோஷம் போடுங்கள்.     3.        மற்றவர்கள்தான் சொல்வார்கள்                 உங்களிடம் ஒரு வார்த்

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 23

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 23வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை - 20.11.2021 அன்று மாலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக நடந்துள்ளது. வழக்கம்போல் எட்டு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடினார்கள்.. அதனுடைய காணொளியைக் கண்டு களியுங்கள்.

யாருக்கும் தெரிய வேண்டாம்?

  கதை : 47  அழகியசிங்கர்   காலையில் கதவைத் திறந்தவுடன், வாசல் படிக்கட்டில் எலி செத்துக் கிடந்தது.  கொஞ்சம்  அருவெறுப்பாக  இருந்தது.  மைதிலி எழுந்து வருவதற்குள் அப்புறப்படுத்தி விடலாமென்று தோன்றியது. உள்ளே உடனே போய் ஒரு முறம் எடுத்துக்கொண்டு வந்து ஒரு தாளில் செத்த  எலியை  தள்ளினேன். பின் மூக்கைப் பிடித்துக்கொண்டு  மாடிப்படிக்கட்டுகளில்  ஜாக்கிரதையாக இறங்கி கேட்டைத் திறந்து வெளியே தூக்கி எறிந்தேன். நான் தினமும் வித்தியாசமான முறையில் தூங்கிக் கொண்டிருப்பேன்.  திடீரென்று  விழித்துக்  கொள்வேன். மைதிலி  நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பாள். கதவைத்திறந்து பால்  பாக்கெட்டை  எடுத்து உள்ளே வைப்பேன்.  அப்படித் திறந்தபோதுதான் செத்த  எலியைப்  பார்த்தேன்.   ஐந்துமணிக்குக் கதவைத் திறந்து பால்  பாக்கெட்டுக்ளை  எடுத்து வைக்காவிட்டால் யாராவது எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். அடுத்த நாளும் கதவைத் திறந்தேன்.  இன்னொரு பெரிய  எ லி செத்துக் கிடந்தது. பூனை கடித்துப் போட்டிருக்குமென்று தோன்றியது. பூனை ஏன் முழுதாக  எலியைக்  கடித்து  கொதறாமல்  இப்படி கொலை செய்துவிட்டுப் போடுகிறது? இதற்குக் காரணம் பு

நகுலனின் ஓர் எட்டுவயதுப் பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்

  அழகியசிங்கர் நகுலன் கதையைப் படிக்கும்போது ஓர் அலாதியான உணர்வு ஏற்படுகிறது. கதையின் மூலம் அவரைப் பற்றியே சொல்கிறார் வேற எதாவது சொல்கிறாரா என்ற சந்தேகம் வந்து விடும். அதிகப் பக்கங்கள் அவர் கதைகள் எழுதவில்லை. மேலே குறிப்பிட்ட கதை ஒரு மூன்றரைப் பக்கக் கதை. அவர் கதையை ஆரம்பிக்கும்போது அவர் அறையில் உட்கார்ந்திருப்பதாகத்தான் ஆரம்பிப்பார். அவர் ஒரு எட்டு வயதுக் குழந்தையை அறிமுகப்படுத்துகிறார். எப்படி? அது ஒரு கிராமத்தில் ஒரு சிறு வகுப்பில் படித்துக்கொண்டிருந்தது. கறுப்பிலும் கறுப்பு. அறிவு கனலும் கண்கள். அதன் பெயர் கலா. வீட்டில் சிமி என்று அழைக்கிறார்கள். பெரும்பாலும் நகுலன் கதைகள் அவருடைய சுய வரலாறா அல்லது கட்டுரையா என்ற சந்தேகம் வரும். அந்தக் குழந்தை கேட்கிறது ஒரு பாட்டுப் புத்தகம் கிடைக்குமா என்கிறது. புத்தகம் கொடுத்தால் அதற்கு விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்றது. அவர் உடனே மலையாளத்தில் புது முத்திரைகள் என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்த கணமே ஒரு ஐயம் ஏற்படுகிறது நகுலனுக்கு. ஒரு மலையாளப் புதுக்கவிதையை அணுக முடியுமாவென்று.

71வது விருட்சம் நேசிப்புக் கூட்டத்தின் காணோளி

 அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 71வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி  மாலை 6.30மணிக்கு (06.11.2021)   சனிக்கிழமை அன்று சிறப்பாக நடந்து முடிந்தது.    கலந்து கொண்டு சிறப்பு செய்த கவிஞர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

71வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 71வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (06.11.2021) சனிக்கிழமை அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணோளியைக் கண்டு களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்