அழகியசிங்கர் சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’ 'வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’. இது ஒரு சிறுகதையின் தலைப்பு. இந்தக் கதையை யார் எழுதியிருப்பார் என்று உங்களுக்கு யூகிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. எல்லோரும் தமக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் கதைகளைத்தான் படிக்கிறார்கள். நான் இந்த முறை சிவசங்கரி என்ற எழுத்தாளரின் கதைகளைப் படித்துக்கொண்டு வருகிறேன். நான் மாதத்திற்கு இரண்டு கூட்டங்கள் நடத்துகிறேன். கதைஞர்கள் கூட்டம் என்ற பெயரில். ஒரு எழுத்தாளர் ஆண் எழுத்தாளர். இன்னொருவர் பெண் எழுத்தாளர் எத்தனைப் பேர்கள் நம்மிடையே சிறுகதைகளைப் படிக்கிறோம். பின் அதைப் பற்றி எங்காவது பேசுகிறோமா அல்லது எழுதுகிறோமா? கட்டாயம் இல்லை. சிவசங்கரியின் ஒரு கதையான ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’ என்ற சிறுகதையைப் படித்து முடித்தேன். அக் கதை எழுப்பிய சோகம் அடங்கவில்லை. ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம் அந்தக் கதை முழுவதும் பரவி இருந்தது. ஆரம்பத்தில் ஒரு கதையை ஒரு எழுத்தாளர் எப்படி ஆரம்பிக்கிறார்