Skip to main content

Posts

Showing posts from August, 2020

அஞ்சலட்டைக் கதைகள் 22

  அழகியசிங்கர் இது என் 22வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது மூன்று நிமிடங்களுக்கு மேல் முடிந்து விட்டது.       எல்லாம் சரி         இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு என்று தெரியாமலிருந்தேன்.  சமீப காலத்தில் அவள் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.  ஏன்?     நானும் அவளும் ஒரே கல்லூரியில் படித்தாலும் எனக்கு முன்னாலேயே அவளுக்கு வேலை கிடைத்து விட்டது.  அதன்பின்தான் எனக்கும் கிடைத்தது.  நானும் அவளும் கல்லூரி காலத்திலிருந்து ஒருவரை ஒருவர் விரும்புகிறோம்.  இருவரும் மேற்கு மாம்பலத்தில் பக்கத்துப் பக்கத்துத் தெருவிலே குடியிருக்கிறோம்.     இரண்டுபேர் குடும்பமும் சாதாரண குடும்பம்.  வாடகை வீடுகளில்தான் வாசம். கடந்த சில மாதங்களாக அவள் என்னுடன் பழகும்போது அலட்சியம் காட்டுவதுபோல் தோன்றுகிறது.  இதை நேரிடையாக அவளிடம் போட்டு உடைத்து விடலாம்.  ஆனால் அதெல்லாம் சரி வராது.      நான் இந்த விஷயத்தில் அவளுடைய உரிமையை முக்கியமாகக் கருதுகிறேன்.  ஒருவர் யாருடன் பேச வேண்டும் யாருடன் பேசக் கூடாது என்பதெல்லாம் அவரவர் தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள்.     இந்தத் தருணத்தில்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்தியா வந்து இரண்டு

சூம் மூலமாக 14வது கவிதைக் கூட்டமாக பத்து வரி கவிதை வாசிக்கும் கூட்டம் - நகுலன் 100வது பிறந்தநாள் நினைவாக

      அழகியசிங்கர்     இது 14வது கவிதை வாசிக்கும் கூட்டம்.  வரும் வெள்ளியன்று  - 28.08.2020 நடக்க உள்ளது.     புதுமையாக இந்த முறை 10வரிகள் கொண்ட கவிதைகளாகக் கவிதை வாசிப்பதை ஏற்பாடு செய்துள்ளேன்.  பெங்களூர் இலக்கிய நண்பர் கிருஷ்ணசாமி நகுலன் குறித்து அறிமுகம் செய்தபின் நகுலனின் சில கவிதைகளையும் வாசிப்பார்.     கிருஷ்ணசாமி அவர்கள் ஒரு கவிஞர்.  சிறுகதை ஆசிரியர். கல்லூரியில் தமிழ் பயில்வுக்கும் பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இதில் பலரும் கலந்து கொண்டு கவிதை வாசிக்க வேண்டும்.      ஒருவருக்கு ஒரு கவிதைதான் வாசிக்க வேண்டும்.  நிதானமாக இரண்டு முறை கவிதையைத் தெளிவாக உச்சரிக்க வேண்டும்.  பத்து வரி கவிதைக்குத் தலைப்பு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.     எந்த விதத்தில் ஒரு கவிதையை பத்து வரிக்குள் கொண்டு வர முடியுமென்பதைப் பார்க்கலாம்.     இதில் யாரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்கலாம்.  எந்த நிபந்தனையும் இல்லை.      வாசிக்கப்படும் சிறந்த கவிதைகளை நவீன விருட்சம் இதழில் வெளியிட விருப்பம்.       இதோ சூம் குறித்து விபரம் கொடுக்கிறேன். Time: Aug 28, 2020 07:00 PM India Join Zoom Meeting h

விருட்சம் கவிதை வாசிப்பு சூம் மூலம் 14வது கூட்டம் (நகுலன் 100வது பிறந்த நாள் முன்னிட்டு)

  அழகியசிங்கர்     14வது கூட்டமாக வர வெள்ளிக்கிழமை விருட்சம் கவியரங்கம் கூட்டம் நடத்தப் போகிறேன்.  இக்கூட்டத்தை எழுத்தாளர் நகுலனுக்குச் சமர்ப்பிக்கப் போகிறோம். பெங்களூர் கிருஷ்ணசாமி நகுலனை நினைவு கூர்ந்து நகுலனின் கவிதைகள் சிலவற்றைப் படிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.     கவியரங்கக் கூட்டத்தை ஒவ்வொரு விதமாய் நடத்த விருப்பம்.  எப்போதுமே கவிதை என்பது உயிருள்ளதாக இருக்க வேண்டும்.  வாசிப்பதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும்.     கிட்டத்தட்ட 66 கவிஞர்கள் கவிதைகள் வாசித்துள்ளார்கள்.  ஒவ்வொரு முறையும் இதை மாற்றி மாற்றி எதாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.     நம்முடைய பெரும்பாலான கவி அரங்கத்தில் டாபிக் கொடுத்து கவிதை எழுதச் சொல்கிறார்கள்.  அல்லது ஒரு மணி நேரம் முன்னதாக கவிதைத் தயாரித்து வாசிக்கச் சொல்வார்கள்.     இதெல்லாம் கவிதைகளாக வருவதை விட வீர வசனமாகத்தான் எனக்குப் படுகிறது.     தலைப்பில்லாமல் கவிதை எழுதுவதில் ஒரு குழப்பம் ஏற்படாமலிருப்பதில்லை.  அந்தக் கவிதையைக் குறிப்பிட வேண்டுமென்றால் எப்படிக் குறிப்பிடுவது?     இந்த முறை கவிதையை வாசிக்க ஒரு அளவுகோல் வைத்திருக்கிறேன்.  அதாவது பத்து வ

சூம் மூலமாக 21.08.2020ம் அன்று விருட்சம் நடத்தும்13வது கவிதை வாசிக்கும் கூட்டம் (ந.பிச்சமூர்த்தி கவியரங்கக் கூட்டம்)

அழகியசிங்கர் எல்லோருக்கும் வணக்கம்.  இது 13வது கவிதை வாசிக்கும் கூட்டம்.  போன வெள்ளிக்கிழமை 12வது கூட்டம் பூனைகளைப் பற்றி வாசிக்கும் கூட்டமாக இருந்தது.  25பேர்களுக்கு மேல் கவிதைகள் வாசித்தார்கள்.  கூட்டம் நிறைவாக இருந்தது. இதுவரை 60 கவிஞர்கள் 200க்கும் மேற்பட்ட கவிதைகள் வாசித்திருக்கிறார்கள்.  21.08.2020 அன்றும் 6 கவிஞர்கள் கவிதைகள் வாசிக்க உள்ளார்கள்.   6 பேர்கள் கருத்துரை வழங்குகிறார்கள்.  இந்த மாதம் 15ஆம் தேதிதான் ந.  பிச்சமூர்த்தி  பிறந்தார்.  புதுக்கவிதையின் பிதாமகர் அவர்.  அவரை ஞாபகப்படுத்தும் விதமாக இந்தக் கவியரங்கத்தின் பெயரை ந. பிச்சமூர்த்தி  கவியரங்கக் கூட்டம் என்று பெயர் சூட்டலாமென்று நினைக்கிறேன். வரும் வெள்ளியன்று கவிதை வாசிப்பவர்கள் பட்டியலை இங்குத் தருகிறேன். 1. கே.ஜெயந்தி 2. எம்.ராமச்சந்திரன் 3. விஜய கல்யாணி 4. எஸ்.வி. வேணுகோபாலன் 5. கவி செல்வா 6. கலக்கல் கந்தசாமி. கருத்துரை வழங்குபவர்கள்  1. மன்னை  ஜீவிதா  அரசி 2. ராய செல்லப்பா 3. அன்புச் செல்வி 4.  ஆர் .கே 5. நாகேந்திர பாரதி 6. கபிலன்  இந்தக் கூட்டத்திற்கு மேற்பார்வையாளர் வ.வே.சு. கூட்டம் சரியாக  ஒன்

இன்று பூனைகளைப் பற்றிய கவிதைகளை வாசித்துக் கொண்டாடுவோம்.

அ ழகியசிங்கர்   இன்று மாலை 7 மணிக்கு  சூமில்  பூனைகளைப் பற்றிய கவிதைகளை  வாசிக்கப்  பலர் தயாராக இருக்கிறார்கள். அவர்களை முன்னதாகவே 15 நிமிடங்கள் முன்னால்  சூமில்  தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறேன். தங்களுடைய கவிதைகளை வாசிப்பது மட்டுமல்லாமல் நம் முன்னோடிகள் கவிதைகளும் வாசிக்கலாம்.  எல்லோரும் ஒரே ஒரு கவிதையை மட்டும் வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பூனைகள் கவிதைகளைச் சேகரித்து இலவசமாகக் கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்து  விநியோகிக்க  எண்ணம். இப்படிச் சொல்வதால் பூனைக்கு நான் செய்யும் துரோகமாகவும் இருக்கலாம். இன்று படிக்கும் கவிதைகளை என் இ  மெயி லில் அனுப்புங்கள்.navina.virutcham @ gmail. com   J oin Zoom Meeting https://us02web.zoom.us/j/89819929866 Meeting ID: 898 1992 9866 No password US02WEB.ZOOM.US Join our Cloud HD Video Meeting

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 12வது கூட்டம் - பூனையைக் குறித்து கவிதை வாசித்தல்

அழகியசிங்கர் பூனையைக் குறித்து நாளை கவிதை வாசிக்க உள்ளோம். மாலை 7 மணிக்கு. முதலில் பாரதியார் கவிதையை வாசிக்க உள்ளேன். அதே போல் இன்னும் சில கவிஞர்களின் கவிதைகளையும் வாசிக்க உள்ளேன். நான் எழுதிய பூனைகளைப் பற்றி கவிதையும் வாசிக்க உள்ளேன். ஒவ்வொருவரும் ஒரு கவிதை மட்டும்தான் வாசிக்க வேண்டும். இந்தக் கூட்டம் சரியாக 1மணி 15 நிமிடங்களுக்குள் முடிப்பதாக உள்ளேன். இந்த இணைப்பை உங்களுக்குத் தருகிறேன். Meeting on Friday Evening at 7 pm. Join Zoom Meeting https://us02web.zoom.us/j/89819929866 Meeting ID: 898 1992 9866 No password

பூனைகளைக் கொண்டாடுவோம்..

  அழகியசிங்கர் உலகப் பூனைகள் தினம் இந்த மாதம் 8ஆம் தேதி முடிந்து விட்டது.   வரும் வெள்ளிக்கிழமை பூனைகளைப் பற்றி கவிதைகள் வாசிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.  இதுவரை விருட்சம்  சார்பில்   நடைபெற்ற  கவிதைக் கூட்டங்களில் 60க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிதைகள் வாசித்து  கவிஅரங்சத்தைக்  கௌரவப்படுத்தி உள்ளார்கள். அவர்களில் பெரும்பாலோர் கலந்துகொண்டு  நிகழ்ச்சியைச்  சிறப்பாக்குவார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் புதியவர்கள் சிலரும் கவிதைகள் வாசிக்க உள்ளார்கள்.  விருட்சம் கவிதை வாசிப்பு என்ற பெயரில் ஒரு  வாட்ஸ்   அப்  குழு உருவாக்கியிருக்கிறேன்.  கவிதைகள் வாசித்த எல்லோருடைய பெயர்களையும் அதில் சேர்த்துள்ளேன்.  ஒரு  குழுவாகச்  செயல்பட வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. பூனையைப் பற்றி கவிதை  வாசிக்கக்  குறைந்தது 60பேர்களாவது வருவார்கள் என்று நினைக்கிறேன்.  எல்லோரும் ஒருமுறைதான் ஒரு கவிதைதான் வாசிக்க இயலுமென்று நினைக்கிறேன். பூனை வாழ்க.   மியாவ் .  (பாஸ்கரனின் பூனைப்படம்)

எளிமையான மனிதர்...

அழகியசிங்கர் அவர் தி நகரில் பூங்கா  லாட்ஜில்  ஒரு சிறிய அறையில் வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கியிருந்தார்.  ஒரே அறை.  நான் போய்ப் பார்க்கும் போது அந்தச் சிறிய அறையில் மகிழ்ச்சியாக இருப்பவர் ஸ்டெல்லா  புரூஸ் .  பெற்றவர்களை விருதுநகரில் விட்டு விட்டு, சுற்றம் எதையும் சேர்த்துக்கொள்ளாமல்,  ஒருவர்  தனியாக வாழ்வது என்னால் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.” படிக்க சில புத்தகங்கள், கேட்க சில இசைத்தட்டுக்கள், பழக சில நண்பர்கள்.  அவ்வளவுதான்.  அவர் உலகம் அத்துடன் முடிந்தது. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உபாசகர்.  எதைப் பற்றியும் தெளிவாக தன் கருத்துக்களைக் கூறக் கூடியவர்.  இப்படி வாழ்ந்து வந்த ராம்  மோஹன்  என்கிற ஸ்டெல்லா  புரூஸ்  தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இப்போதெல்லாம் இருந்தால் அவருக்கு 80 வயது முடிந்திருக்கும்.   மார்ச்சு  ஒன்றாம் தேதி 2008ல் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அவர் தற்கொலை செய்து கொண்டே 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவருடைய பிறந்தநாள் இன்று.  ஒவ்வொரு முறையும் நான் ஞாபகமாய் அவர் பிறந்த தினத்தையும் மரணம் அடைந்த தினத்தையும் முக

உலகப் பூனைகள் தினத்தை ஒட்டி விருட்சம் கவியரங்கம்

  அழகியசிங்கர் உலகப் பூனைகள் தினம் இன்று.  நான் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டம் நடத்த ஆரம்பித்து 3 மாதங்கள் ஓடிவிட்டன.  அடுத்த வாரம் (14.08.2020) உலகப் பூனைகள் கவியரங்கம் நடத்த முன் வந்துள்ளேன்.  பூனைகள் குறித்து ஏராளமானவர்கள் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.  பூனை ஒரு ஆன்மிக மிருகம்.  எளிதில் யாரிடமும் பழகாது.   ஒரு பூனையைத் தூக்கி மேலே போட்டால் அது கொஞ்சமும்  அடிப்படாமல்  தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமை வாய்ந்தது.  அசோகமித்திரன் தாமோதர ரெட்டி வீட்டில்  வசித்தபோது  அவருடன் பூனைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் நான்  கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்தும் போது ஒவ்வொரு முறையும் பூனைகள் குறித்து கவியரங்கம் நடத்த வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும். இதோ அடுத்த வாரம் உலகப் பூனைகள் கவியரங்கம் நடத்த உள்ளேன். முதலில்   பாரதியார்  எழுதிய பூனைக் கவிதையுடன் துவங்க உள்ளேன்.   பூனைகள் குறித்து கவிதைகள் எழுதி உள்ள கவிஞர்களை எல்லாம் ஒன்று திரட்ட விரும்புகிறேன். வாசிக்க வரும் ஒவ்வொரு கவிஞரும் பூனை பற்றி எழுதிய கவிதை மட்டும் வாசிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கூட இருக்கலாம்.   வாசிக்க

நாளை எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு அஞ்சலிக் கூட்டம்

அழகியசிங்கர் கடந்த சில  மாதங்களாக  சூமில்தான்  கூட்டங்கள் நடக்கின்றன. நேரில் கூட்டம் நடத்துவதுபோல் இது வராது என்று ஒரு சிலர் நினைக்கலாம்.  ஆனால்  சூமில்  கூட்டம் நடத்தும்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை.  யார் வேண்டுமானாலும் எங்கிருந்தாலும் கலந்து கொள்ளலாம். இன்றைய சூழ்நிலையில் நேரிடையாகக் கூட்டம் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான்  மூகாம்பிகை   காம்பளெக்ஸில்  50க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி உள்ளேன்.   அங்குத்  தொடர்ந்து வருபவர்கள் பத்துக்கும் மேல் இருக்க மாட்டார்கள்.  ஆனால்  சூமில்  நடத்தும் கூட்டங்களில் 40க்கு மேல் வருகிறார்கள்.   எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு  அஞ்சலிக்  கூட்டம் நடத்துகிறோம். இதுவரை பத்து பேர்களுக்கு மேல் கலந்துகொண்டு பேச வருவதாகக் கூறி உள்ளார். அவர்களுக்கு நன்றி. இன்னும் பலர் கலந்துகொண்டு பேச விரும்பினால் நேரில்  சூமில்  வரும்போது தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நாளை (06.08.2020) ஏழுமணிக்குக் கூட்டம்.  கூட்டம் பற்றி விபரம்  இங்குத்  தருக

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 149

அழகியசிங்கர்   பூக்குட்டி  யாழி  அவனது கையசைவில் ஒலித்த  மணி எழுப்பி விடுகிறது பூக்குட்டியை கோர்த்து மாலையைப்போல்” குச்சியில் தொங்கும் பஞ்சு மிட்டாயை விழிவிரித்து இதழ்பிரித்து பெரும்புன்னகையுடன் ஏந்திக்கொள்கிறாள் புசுபுசுவென இருக்கும் பிங்க்பொதியை விரலால் தொடுகிறாள் ஆஆ வென வாய்திறந்து நாக்கு ரோஸ்கலராயிடுசிசே சொல்ஙூக் குதிக்கிறாள் அந்த பிங்க் நிறச்சாலையில் பயணிக்கத் தொடங்கிவிட்டேன் நான் நன்றி : கேவல் நதி - யாழி - உயரிமை பதிப்பகம் - பக்: 64 - விலை : 60. 

எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு சூம் மூலம் அஞ்சலி

அழகியசிங்கர் விருட்சத்துடன் குவிகம் இணைந்து நடத்தும் சூம் கூட்டம். விருட்சம் மூலமாக   அஞ்சலிக்  கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன்.   கடைசியாக நடத்திய  அஞ்சலிக்  கூட்டம் அசோகமித்திரனுக்கு . ஞாபகத்திலிருந்து  சொல்ல விரும்புகிறேன் யார் யாருக்கு  அஞ்சலிக்  கூட்டங்கள் நடத்தியிருக்கிறேனென்று.  1. சி சு செல்லப்பா 2. ஷண்முக  சுப்பையா  3.  கரிச்சான் குஞ்சு  4. வெங்கட் சாமிநாதன் 5. ஜெயகாந்தன்   6. ஞானக்கூத்தன்   7 அசோகமித்திரன்  இவர்களில் பலர் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள்.  சிலர் நண்பர்கள்  சொல் லி கூட்டம் நடத்தியிருக்கிறேன். இந்த முறை  சூம்  மூலமாகக் கூட்டம் நடத்த எண்ணம்.  கலந்து கொள்ள  விரும்பு ப வர்கள்   9444113205 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும்  வாட்ஸ்அப்பில்  தெரியப்படுத்தவும்.   தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர்களில் சா. கந்தசாமியும்  ஒருவர்.  சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று அவருடைய பங்களிப்பை யாரும் மறைக்க முடியாது.  அவருடைய  சாயா வனம்  என்ற நாவல் புத்தகமாக வரும்போது அவருக்கு வயது 24.  திரும்பவும் அதை மூன்று முறை எழுதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.         கூட்டம் வரு