Skip to main content

Posts

Showing posts from November, 2014

கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்

திட்டமற்ற....


எஸ். வைதீஸ்வரன்



வானம் கட்டுப்பாடற்று,
பெற்றுத் திரியவிட்ட
மேகங்கள்,
பொல்லா வாண்டுகள்.
நினைத்த இடத்தில, கவலையற்று,
நின்ற தலையில் பெய்து விட்டு,
மூலைக்கொன்றாய் மறையுதுகள்,
வெள்ளை வால்கள்

கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்

மூன்று ஜப்பானியக் கவிதைகள்


நடவு நடும் பெண்கள்
பாடும் பாட்டுகளிலே மட்டும்தான்
சேறு பட்டிருக்கவில்லை

 - கொனிஷ் ரெய்லான்

முடியாது -
மனித உள்ளத்தை
யாரும் சரிவரப்
புரிந்து கொள்ள முடியாது.
ஆனால்
நான் பிறந்த ஊரில்
மலர்கள்
முன் போலவே
மலர்ந்து
மணம் வீசுகின்றன.

- ஸராயுகி

யாரோ கிழவன்
     - நான் அறியாத அந்நியன் -
என்னைத் தடுக்கிறான்
நான் கண்ணாடியில்
       பார்த்துக் கொள்ளும்போது

    - ஹீடோமாரோ


  தமிழில் :  க.நா.சு

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் ஆறாவது கூட்டம்

அழகியசிங்கர்



 25.10.2014 சனிக்கிழமை அன்று நடந்தது.   தமிழில் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் இரா முருகன் அவர்கள் தலைமையில் இக் கூட்டம் இனிதாக துவங்கியது. 
கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக விருட்சம் ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கும் சிறுகதையைப் பற்றிய பின்னணியுடன் ஆரம்பமானது.  உயிர்எழுத்து செப்டம்பர் மாதம் வெளிவந்த புதுச் சட்டை என்கிற ப முகமது ஜமிலுதீனின் கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.  அதைப் பற்றிய குறிப்பை அடியேன் வாசித்தேன்.
பின், தேனுகா, ராஜம் கிருஷ்ணன் மறைவை ஒட்டி ஒரு நிமிடம்  மௌன அஞ்சலி நடத்தினோம். 
ஒரே மழை பயமாக இருந்ததால் கூட்டம் எங்கே நடக்காமல் போய்விடுமோ என்ற அசசம் எங்களை விட இரா முருகனுக்கு அதிகமாக இருந்தது.  நல்லகாலம்.  கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.
இரா முருகனின் விஸ்வரூபம் என்ற மெகா நாவலை  தினமும் சில பக்கங்கள் என்று படித்துக் கொண்டு வருகிறேன்.  எப்போது முடிக்கப் போகிறேன் என்பதை அம்பலப் புழை ஸ்ரீகிருஷ்ணன்தான் அறிவார்.
எனக்கு இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.  காஞ்சிபுரத்தில் வே நாராயணன் என்ற ஒருவர் இருந்தார்.  அவர் ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டம் நடத்துவார்.  கூட்டம் …

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

ஷஸிகா அமாலி முணசிங்க
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில் உடைந்து தெறித்தது மலையின் சிரசு இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம் புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே
அருளும் பாதுகாப்பும் தரும்படிநாம் உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும் நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம்
தென்னோலைக் கூரையினூடே தென்படும் வானத்தை நோக்கி வசந்தங்களைக் கேட்டபோதும் உழைத்துத் தேயும் கரங்களுக்குக் கிடைக்காது ஒருபோதும் எனவே இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது உறங்குகிறேன் மண்ணின் கீழே வழமைபோலவே


குறிப்பு - அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும் !

அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

எம்.ரிஷான்ஷெரீப்




கழுத்துநீண்டவாத்துக்கள்பற்றியஉன்கதையாடலில்
சாவல்குருவிக்குஎன்னதிரை
அதுவும்இருந்துவிட்டுப்போகட்டும்
அடித்தசாரலில்
வண்ணத்துப்பூச்சியின்நிறம்மட்டும்கரைந்தேபோயிற்று
நல்லவேளைசருகுப்பூக்கள்அப்படியேதானே

பிறகென்ன
வற்றியஆழக்கடல்களின்நிலக்கரையில்
துருப்பிடித்துப்பாதிமணலில்மூழ்குண்ட
நங்கூரங்களின்கயிற்றோடு
உப்புக்கரித்துத்தனித்திருக்கின்றனசிதிலப்படகுகள்

அந்திமாலையில்தூண்டிலிட்டமர்ந்து
வெகுநேரம்காத்திருக்கும்சிறுவன்
பாரம்பரியவிழுமியங்களைப்போர்த்தி
உணவுதயாரிக்கும்இளம்பெண்
நிலவொளியில்புயல்சரிக்க
போராடிஅலையும்பாய்மரக்கப்பல்
அழிந்தமாளிகை
அசையாப்பிரேதம்

அதுஎன்நிலம்தான்
உன்மொழிவரையும்ஓவியங்களில்
எல்லாமும்